முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இங்கிலாந்து ராணிக்கு இடமில்லை

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

லண்டன், சன்டே டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அந்நாட்டு ராணி எலிசபெத்துக்கு இடம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான சன்டே டைம்ஸ் நாளிதழ் ஆண்டுதோறும் இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 1000 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல்முறையாக இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பெயர் முதல் 300 பேரில் இல்லை. உக்ரைனில் பிறந்து இங்கிலாந்தில் செட்டிலான தொழில் அதிபர் லென் பிளாவட்னிக் இங்கிலாந்தின் மிகப் பெரிய பணக்காரர் ஆவார். அவரது சொத்து மதிப்பு 13.7 பில்லியன் பவுண்ட் ஆகும். கடந்த ஆண்டு அவர் இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருந்தார். இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்துஜா சகோதரர்களான ஸ்ரீ மற்றும் கோபி உள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு 13 பில்லியன் பவுண்ட் ஆகும். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர்கள் இந்துஜா சகோதரர்கள். 1989ம் ஆண்டு இங்கிலாந்தின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த அந்நாட்டு ராணி எலிசபெத் இந்த ஆண்டு முதல் முறையாக முதல் 300 இடங்களில் வரவில்லை. பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு 302வது இடம் தான் கிடைத்துள்ளது. ராணியின் சொத்து மதிப்பு 340 மில்லியன் பவுண்ட் ஆகும். அவரது சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் 10 மில்லியன் பவுண்ட் அதிகரித்தும் அவரது நிலைமை இவ்வாறு உள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மட்டும் 80 பெரும் பணக்காரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து