முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கவாழ் இந்திய பெண் விஞ்ஞானிக்கு ரூ. ஒரு கோடியே 50 லட்சம் பரிசு

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: செயற்கை கல்லீரல் உருவாக்கிய அமெரிக்கவாழ் இந்திய பெண் விஞ்ஞானிக்கு விருதும் ரூ. ஒரு கோடியே 50 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. அமெரிக்க வாழ் இந்தியர் சங்கீதா பாட்டியா. இவர் ஒரு விஞ்ஞானி ஆவார். இவர் செயற்கையாக மனித கல்லீரல் உருவாக்கி உள்ளார்.

நோய்களை குணமாக்க எந்த வகையான மருந்து பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த செயற்கை கல்லீரல் மூலம் சோதனை நடத்த முடியும். இதற்காக அவருக்கு 2015ம் ஆண்டுக்கான ஹெனீஷ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ. ஒருகோடியே 50 லட்சம் பரிசு தொகையும்வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மசாசூசெட்வ் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இவர் செயற்கை கல்லீரலுக்கு மலேரியா நோய் சிகிச்சைக்கான மருந்தை வழங்கி முற்றிலும் குணமடைய செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous April 28, 00:46

    அவர் ஒரு அமெரிக்கர். இந்தியர் கிடையாது.

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து