முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் சூறாவளி மழைக்கு 39 பேர் பலி

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

பெஷாவர், பாகிஸ்தானில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு 39 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர்பக்துன் சுவா மாகாணத்தில் நேற்றுமுன்தினம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. காற்று பலமாக வீசியதால் ஏராளமான வீடுகளின் கூரைகள் பறந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து தரைமட்டமாகின. நூற்றுக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் விளம்பர பலகைகள் கூண்டோடு சாய்ந்தன. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. அதனால் பெஷாவர் மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மரங்கள் சாய்ந்ததால் ரோடுகளில் போக்குவரத்து தடைபட்டது. சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு 39 பேர் பலியாகினர். 214 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் பெஷாவரில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மின் கம்பங்கள் சாய்ந்ததால் பெஷாவர், சர்சத்தா, நவுஷெரா உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கின. மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. மழைக்கு பலியானவர்கள் குடும்பங்களுக்கு கைபர் பக்துன்கவா மாநில முதல்வர் பெர்வேஷ் கட்டாக் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து