முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு மாத சம்பளத்தை எம்.பி.க்கள் வழங்க வெங்கையா வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நேபாளத்தை சீர்குலைத்த நிலநடுக்க நிவாரண நிதியாக அனைத்து எம்.பி.க்களும் தங்கள் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க வேண்டும் என்று மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு  வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

நேபாளத்தில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டார்கள். அந்நாட்டு மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டியது அவசியம். அதன் பொருட்டு நாம் அனைவரும் நமது ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்று எம்.பி.க்களை வலியுறுத்தி கேட்டுக் கொண்டார் வெங்கையா நாயுடு.

எனது இந்த வேண்டுகோளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளன என்றும் வெங்கையா நாயுடு தெரிவித்தார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எம்.பி.க்கள் தங்களது சம்பளத்தை தந்து உதவ வேண்டும் என்று வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் ஏராளமான நேபாள மக்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் தங்கள் நாட்டில் என்ன ஆனதோ, தங்கள் உறவினர்களுக்கு என்ன ஆனதோ என்ற கவலையில் மூழ்கி உள்ளனர். எனவே இது குறித்து நான் பிரதமரிடம் பேசினேன். தேவைப்பட்டால் நேபாளத்திற்கு ரயில் வசதி விரிவுபடுத்தப்படும் என்று பிரதமர் தன்னிடம் கூறியதாகவும் வெங்கையா நாயுடு தெரிவித்தார். நேபாளத்தில் 7.9 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 80 ஆண்டுகளில் இதுவரை இப்படி ஒரு மோசமான பூகம்பம் அந்த நாட்டில் ஏற்பட்டதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானோர் எண்ணிக்கையும் 3,700 ஐ தாண்டி விட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து