முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும் வீரர்கள் தவிப்பு மீட்க அமெரிக்கா உதவி

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

வாஷிங்டன், எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் ஆயிரம் மலையேறும் வீரர்களை மீட்க அமெரிக்கா உதவி செய்கிறது.

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2,500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். எவரெஸ்ட் சிகரத்தில் தற்போது மலையேறும் சீசன் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் எவரெஸ்ட் சிகர பகுதிகளிலும் எதிரொலித்தது. இதனால் பனிப்பாறைகள் சரிந்தது. அதில் சிக்கி 18 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர். மேலும் ஆயிரம் பேர் அங்கு சிக்கி தவிக்கின்றனர். அவர்களில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டிர்கள் வழிகாட்டிகள் உள்ளிட்டோர் அடங்குவர். அவர்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அங்கு பனிப்பாறைகள் சரிந்துள்ளதால் அவர்களை ஹெலிகாப்டர்கள் மூலமே மீட்க முடியும். அமெரிக்காவை சேர்ந்த மலையேறும் வீரர்கள் பலரும் எவரெஸ்டில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க அமெரிக்கா ஹெலிகாப்டர் வழங்க முன்வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து