முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாள நிலநடுக்கம்: உயிரிழந்த இந்தியர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வாசன் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

சென்னை: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

நேபாளத் தலைநகர் காத்மாண்டு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 2 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் துயரமானது. மேலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் இந்தியாவை சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்திற்கும், இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்தும் குறைந்தது தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும்.

இடிபாடுகளில் சிக்கித் தவிப்போரை போர்க்கால அடிப்படையில் மீட்க வேண்டும். நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து