முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறந்தநாளை முன்னிட்டு இளையராஜாவைக் கொண்டாடும் ரேடியோ சிட்டி

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

ilayaraja

புதிய முனைவுகளையும், நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதில் முன்னணி வகிக்கும் ரேடியோ சிட்டி 91.1 எஃப்எம், இந்தியாவின் இசை மேதைகளுள் ஒருவரைப் பாராட்டவும், புகழைக் கொண்டாடவும் ‘ராஜா ராஜாதான்’ என்ற தலைப்பில் புதிய பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது. அவரைக் கௌரவிக்கும் வகையில் 91 நாள்களும் இடைவிடாது இன்னிசை மழை பொழியும்.
1000 படங்களுக்கு இசை அமைத்து மகத்தான சாதனை படைத்த இசை மாஸ்ட்ரோவின் பிறந்த நாள் நெருங்கிக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து அவரைக் கௌரவிக்க ரேடியோ சிட்டி 91.1 எஃப்எம் தீவிர முனைவுகளை மேற்கொண்டுள்ளது. 91 நாள்கள் இடைவிடாது பொழியும் இசை மழை நிகழ்ச்சி ஜூன் 2 ஆம் தேதியன்று நிறைவு பெறும். ஆம்.

அன்றுதான் இசை ஞானி இளையராஜாவின் பிறந்தநாள். இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்பும் மையாமாகவே ரேடியோ சிட்டி 91.1 எஃப்எம் மாறியுள்ளது. இசை மாஸ்ட்ரோவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் அவரது எவர்க்ரீன் மற்றும் உற்சாகமூட்டும் பாடல்கள் ஒலிபரப்பாகும். அடுத்து வரும் 91 நாள்களும் இளையராஜாவின் சங்கீத சமுத்திரத்தில் ரசிகர்கள் நீந்தி மகிழலாம். இளையராஜவிற்கு வழங்கப்படும் இந்த கௌரவத்தில் அவரது வாழ்க்கையில் இடம் பெற்றவர்களும் பங்கேற்கின்றனர். அவரது சகோதரர், மகள் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றியவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவருடன் பழகிய சுகமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். 

டிரம்ஸ் இசைக் கலைஞர் சிவமணி, நடிகை குஷ்பூ, நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் இசைத் துறையில் இளையராஜா படைத்த மற்றும் படைத்துக் கொண்டிருக்கும் சாதனைகள் குறித்து நீண்ட நேரம் பேசினர். தமிழ்த் திரை இசைக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த இசை ஞானி இளையராஜாவை ‘ராஜா ராஜாதான்’ நிகழ்ச்சி மூலம் கௌரவித்த ரேடியோ சிட்டியையும் பாராட்டத் தவறவில்லை. இளையராஜாவின் அரிதான நிழற்படங்களுடன் ரேடியோ சிட்டி வாகனம் நகரைச் சுற்றி வந்து அவரது ரசிகர்களைச் சந்திக்கும். தங்களுக்குப் பிடித்தமான அவரது பாடலை ஒலிபரப்ப விரும்பும் ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை ரேடியோ சிட்டி 91.1 எஃப்எம்முக்குத் தொலைபேசி மூலம் அழைத்தோ, தேர்ந்தெடுக்கப்பட்ட சில மால்களில் உள்ள பெட்டிகளில் கோரிக்கைகள் மூலமோ தெரிவிக்கலாம்.

இந்நிகழ்ச்சி குறித்து இசை ஞானி இளையராஜா கூறுகையில் ‘ரேடியோ சிட்டி 91.1. எஃப்எம் எனக்கு வழங்கியிருக்கும் இந்த அங்கீகாரமும் பெருமையும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய பிறந்தநாளுக்கு இதைவிடச் சிறந்த பரிசு வேறொன்றும் இருக்க முடியாது. எனது பிறந்த நாளைக் கொண்டாட 91 நாள்களை ஒதுக்கிய ரேடியோ சிட்டி 91.1. எஃப்எம் முனைவிற்கும், முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனது ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். ரசிகர்களின் வேண்டுகோளை நிறைவு செய்யும் வகையில் அவர்களை விரும்பும் பாடல்களை ஒலிபரப்பும் ரேடியோ சிட்டி 91.1. எஃப்எம், ஒருவரின் பிறந்தாளை எவ்வாறு கொண்டாடினால் அவர் மகிழ்ச்சி அடைவார் என்பதற்கு பெஞ்ச்மார்க்காக விளங்குகிறது’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து