முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நட்பதிகாரம் 79 – முன்னோட்டம்

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.ரவிகுமார் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் ‘நட்பதிகாரம் – 79’.
இந்த படத்தில் கதாநாயகனாக ராஜ்பரத் நடிக்கிறார். இவர் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, படத்தில் நடித்துள்ளார். இன்னொரு நாயனாக ‘வல்லினம்’ படத்தில் நடித்த அம்ஜத்கான் நடிக்கிறார்.

கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள். மற்றும் M.S.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கலக்கபோவது யாரு விக்னேஷ் கார்த்திக் காமெடியனாக அறிமுகம் ஆகிறார்.படம் பற்றி இயக்குனர் ரவிச்சந்திரன் கூறியதாவது,
“கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்த வேளை, உற்சாகம்” படங்களைத் தொடர்ந்து நான் இயக்கும் ஐந்தாவது படம் ‘நட்பதிகாரம் 79’. ‘மஜ்னு’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜை இசையைமப்பாளராக அறிமுகப்படுத்தினேன். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்திலும் தேவா இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அதே போல் தீபக் நிலம்பூர் இசையில் ‘நட்பதிகாரம் 79’ படத்தின் ஐந்து பாடல்களும் மிகச் சிறப்பாக வந்துள்ளது.

இந்தப் படத்தில் தேவா ஒரு சிறப்பான கானா பாடலைப் பாடியிருக்கிறார். இந்த வருடத்தில் முக்கிய ஹிட் பாடலாக இது இருக்கும். ‘கண்ணெதிரே தோன்றினாள்’ நட்பையும் காதலையும் சொன்ன விதத்தில் பெரிய வெற்றி அடைந்தது. அதே போல் ‘நட்பதிகாரம்-79’ படத்தில் நட்பு, காதல், குடும்ப உறவுகள் பற்றி வேறு ஒரு பரிமாணத்தில் சொல்லி இருக்கிறேன்,” என்கிறார் இயக்குனர் ரவிச்சந்திரன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து