முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளை வேஷ்டி சட்டையில் இளையதளபதி விஜய்

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

 புலி படத்தில் வெள்ளை வேஷ்டி சட்டையில் சும்மா அசத்தலாக போஸ் கொடுத்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார் விஜய். இதனை சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். புலி படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்த பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'புலி'. பிரம்மாண்டமாக தயாராகிவரும் இப்படத்தில் ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து