முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேய் படத்தில் நடித்தால் பிரகாசம் பிறக்கும்

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

tapsee

பேய் படத்தில் நடித்தால் பிரகாசம் பிறக்கும் என்ற சென்டிமென்ட், நடிகைகள் பலரை ஆட்கொண்டு உள்ளது. அந்தப் பட்டியலில், தாப்ஸியும் இணைந்துள்ளார். ‘காஞ்சனா 2’வில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்படும் நிலையில், இதை அப்படியே உச்சத்துக்கு கொண்டு செல்ல தீர்மானித்துள்ளார்.

அதேநேரத்தில், அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்த, ‘பேபி’ ஹிந்தி படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சினிமாவில் முதல் வெற்றி எளிது; தொடர் வெற்றி தான் சிரமம் எனச் சொல்லும் தாப்ஸி, கிசுகிசு, பொழுதுபோக்கு மற்றும் பேச்சைக் குறைத்துக் கொண்டு, நடிப்பில் தீவிர கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

இயக்குனர்கள் தன்னை மனதில் வைத்து கதையை வடிவமைக்கும் அளவுக்கு பெயரெடுத்தால் போதுமாம், தாப்ஸிக்கு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து