முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்ச்சி மறுப்பு கொள்கையை இறுகப்பற்றியிருப்பவர் நித்யா மேனன்

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

கவர்ச்சி மறுப்பு கொள்கையை இறுகப்பற்றியிருப்பவர் நித்யா மேனன். இதனால் பல வாய்ப்புகளை இழந்தபோதிலும், அதற்காக அலடிக் கொள்ளாதவர். அப்படிப்பட்ட நித்யா, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் இளசுகளைப் பற்றிய, ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் நடித்திருந்தார்.‘சவாலான கேரக்டர்கள் தான் எனக்குப் பிடிக்கும்.

மணிரத்னம் சார் இந்தக் கதையைச் சொன்னதும், என்னை அந்தக் கேரக்டரில் மனசுக்குள் ஓட்டிப் பார்த்தேன். நம்பிக்கை வந்தபின்னரே நடித்தேன். படம் நல்லபடியாக போகிறது. பாராட்டும் குவிகிறது. இதைத் தான் எதிர்பார்த்தேன், பரபரப்பை அல்ல. ஹீரோயின் தான் என்றில்லை, சிறு கேரக்டராக இருந்தாலும் எனக்கு பிடித்து இருந்தால் நிச்சயம் அதில் நடிப்பேன். இது தான் என் கொள்கை’ என்கிறார், நித்யா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து