முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஞ்சம் வாங்கி சொத்துக்கள் சேர்த்த சுங்கத்துறை அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை: மதுரை சிபிஐ கோர்ட்டு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

மதுரை: லஞ்சம் வாங்கி சொத்துக்களை சேர்த்த சுங்கத்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து மதுரை சிபிஐ கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

திருச்சியை சேர்ந்தவர் ஜெயராஜ். சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஜெயராஜ் லஞ்ச பணத்தில் தனது மாமனார் மற்றும் மாமியார் பெயரில் சொத்துக்களை வாங்கியதும், பின்னர் அதனை தனது மனைவி மற்றும் மகன் பெயரில் மாற்றி இருப்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் கடந்த 2006-ம் ஆண்டு ஜெயராஜை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரையில் உள்ள சிபிஐ கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் மூத்த வக்கீல் என்.நாகேந்திரன் ஆஜரானார். பல்வேறு கட்ட விசாரணையை அடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று சிபிஐ கோர்ட்டு அறிவித்திருந்தது. அதன்படி சிபிஐ கோர்ட்டு நீதிபதி எம்.எம். கிருஷ்ணன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதிய செய்யப்பட்டதால் சுங்கத்துறை அதிகாரியான ஜெயராஜூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் ஜெயராஜ் பணி காலத்தின்போது லஞ்சம் வாங்கி சேர்த்த ரூ.27 லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து அரசுடமையாக்கவும் நீதிபதி எம்.எம்.கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட சுங்கத்துறை அதிகாரி ஜெயராஜ் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் பணியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து