முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலநடுக்கம்: காட்மாண்டு நிலப்பகுதி 10 அடி நகர்ந்து விட்டது: கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக நிபுணர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

நேபாள்: நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை 7.8 ரிக்டர் அளவு கோலுக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், அந்த நாட்டின் நிலதட்டில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதாக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த பல்கலைக்கழக ஆய்வாளர் ஜேம்ஸ் ஜாக்சன் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பூகம்பம் ஏற்கெனவே எல்லாரும் எதிர்பார்த்தது தான். ஆனால் அது இவ்வளவு பெரிய பேரிழபை ஏற்படுத்தும் என்று யாரும் நினைக்கவில்லை. நேபாளத்தின் அடித்தட்டு பகுதியை இந்த நிலநடுக்கம்  திசை மாற்றியுள்ளது. குறிப்பாக தலைநகர் காட்மாண்டு நகர நிலப்பகுதி தெற்கு நோக்கி நகர்ந்து விட்டது. நிலநடுக்கத்துக்குப் பிறகு  ஆய்வு செய்த போது காட்மாண்டு நகரின் அடிமட்ட நிலத்தட்டு 10 அடி தூரத்துக்கு தெற்கு நோக்கி சென்று விட்டது. இது மேலும் நகரும் போது வட இந்தியாவில் அதிக சேதம் ஏற்படும்.

இந்திய துணை கண்டத்தில் நிலத்தட்டில் தொடர்ந்து நெருக்குதல் காணப்படுகிறது. இது எதிர்காலத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில்  எந்த மாற்றமும் ஏற்படவில்லைய.
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் ஆகும். அந்த உயரம் அப்படியே உள்ளது. கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்ட போதும் எவரெஸ்ட் சிகரம் மாறாதது ஆச்சரியம்தான்.

இவ்வாறு ஜேம்ஸ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து