முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் தேர்தல் தொகுதி பங்கீட்டில் நிதிஷ், லாலுவுக்கு கருத்து வேறுபாடு

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

பாட்னா - பீகாரில் ஜனதா பரிவாரில் ஒன்று சேர்ந்த தலைவர்கள் நிதிஷ், லாலு ஆகியோர் தற்போது தேர்தலில் தொகுதிகளை பங்கீட்டு கொள்வது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பீகாரில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வடமாநிலங்களில் இருந்த 6 ஜனதா கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா பரிவார் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. விரைவில் ஒருங்கிணைந்த கட்சிகளின் பெயர் மற்றும் சின்னத்தை முலாயம் சிங் அறிவிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் ஜனதா பரிவாரில் முதன்முறையாக நிதிஷ் மற்றும் லாலுவிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பீகார் தேர்தலில் இரண்டு தலைவர்களும் வெவ்வேறு கருத்துகளை கொண்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 115 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. அதே நேரத்தில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளத்திற்கு வெறும் 22 எம்எல்ஏக்களே உள்ளனர். எனவே நிதிஷ்குமாருக்கு பாஜ ஆதரவுடன் தான் இத்தனை தொகுதி கிடைத்தது என்று ஆர்ஜேடி கருதுகிறது. இதனால்தான் லோக்சபா தேர்தலில் நிதிஷ்குமாரால் ஜொலிக்க முடியவில்லை என்று லாலு கருதுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பீகார் தேர்தலில் லாலு 100 தொகுதிகளை கேட்டு வலியுறுத்துவார் என்று கட்சி தரப்பினர் எதிர்பார்க்கின்றனர். அதே நேரத்தில் நிதிஷ்குமார் தரப்பிலும் 100க்கும் அதிகமான தொகுதிகளை எதிர்பார்ப்பதாக ஆளும் கட்சியினர் கூறுகின்றனர். எனவே பீகார் தேர்தலில் தொகுதிகளை பகிர்ந்து கொள்வதில் நிதிஷ், லாலு இடையே கருத்து வேறுபாடு எழ வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பாஜவை எதிர்த்து மதசார்பற்ற கூட்டணியாக இணைந்துள்ள ஜனதா பரிவார் தாக்கு பிடிக்குமா என்பது விரைவில் தெரிந்து விடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து