முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி பேச்சுக்கு கண்டனம்: எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்தியா பற்றி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் மாநிலங்களவையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட அமளியால் அவை மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அந்நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும், ஊழல்மிகு இந்தியாவை திறன்மிகு இந்தியாவாக மாற்றுவதே எனது குறிக்கோள் என பேசினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த விவகாரம் குறித்து நேற்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்தியாவை பற்றி வெளிநாட்டில் எப்படி பிரதமர் விமர்சிக்கலாம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதுதொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவை தொடங்கியதில் இருந்து 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் அமளி அதிகரித்ததால் 3வது முறையாக மதியம் 2 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து