முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில நடுக்கம்: பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டக்கூடும்: நேபாள பிரதமர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

காத்மாண்டு:நேபாளம் நில நடுக்கத்தில்பலி எண்ணிகை  10 ஆயிரத்தை எட்டும் என்று  நேபாளம் பிரதமர் சுசில் கொய்ராலா தெரிவித்தார். இந்த நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு கூடாரமும் மருந்துப்பொருட்களும் வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேபாளத்தில் இந்த மாதம் 25ம்  தேதியன்று 7.9ரிக்டர் அளவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தில் அந்த நாட்டின் தலைநகர் காத்மாண்டு உருக்குலைந்து போனது. அங்கு பாரம்பரிய மிக்க கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து தரைமட்டமாக ஆகின.
இந்த இயற்கைப்பேரிடரில் பலி எண்ணிக் கை 10ஆயிரத்தை எட்டும் என நேபாள பிரதமர் சுசில் கொய்ராலா நேற்று தெரிவித்தார்.போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் நடைபெறுகின்றன இந்த தருணம் நேபாளத்திற்கு இக்கட்டான நிலையாகும் என்றும்  அவர் கூறினார்.

கடந்த 1934ம்ஆண்டு இமாலய தேசமான நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 8ஆயிரத்து500பேர் இறந்தனர். அந்த பலி எண்ணிக் கையை மிஞ்சும் வகையில் தற்போதைய நில நடுக்கத்தில் 10ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று அந்த நாட்டில் நில நடுக்கம் ஏற்பட்டபோது அதன் பிரதமர் கொய்ராலாஅயல் நாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் நில நடுக்கம் ஏற்பட்ட மறுதினம்  சொந்த நாட்டிற்கு திரும்பினார்.

நில நடுக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து அந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகள் இடிந்து தரைமட்டமானதால்  பொது இடங்களில்  து◌ாங்குகிறார்கள்.  பல முறை ஏற்பட்ட நில நடுக்கத்தினை தாங்க முடியாமல் அவர்கள் பரிதவித்து இருக்கிறார்கள்.நேபாளத்திற்கு தற்போது அதிக அளவில் மருந்துப்பொருட்கள் தேவைப்படுகின்றன. மக்கள் வயல் வெளிகளிலும் மழையிலும் நனைந்த படி துாங்குகிறார்கள்.

இந்த கொடூர நில நடுக்கத்தில் 7ஆயிரம் பேர்   காயம் அடைந்திருக்கிறார்கள் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதும் புனர் வாழ்வு அளிப்பதும் பெரும் சவாலாக இருக்கிறது என்றும் பிரதமர் கொய்ராலா தெரிவித்தார்.நில நடுக்கத்தில் இது வரை இறந்தவர்களின் எண்ணிகை 4ஆயிரத்து349ஆக உள்ளது என நேபாள உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

நேபாளத்தின் முன்னுரிமையாக மீட்புப்பணி நடைபெறுகிறது. இந்த மீட்புப்பணியில் இந்திய குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று அங்குள்ள இந்திய தூதரக செய்தித்தொடர்பாளர் அபய் குமார் கூறினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 3ஆயிரத்து 500பேரை வான் வழியாக மீட்டு இருக்கிறோம் அங்கு பரிதவித்து இருக்கும் இந்தியர்களை பத்திரமாக கொண்டு வர100 பேருந்துகள் காத்மாண்டுவிற்கு வந்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து