முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 3–ம் நிலை பூகம்பம் தாக்கும்: சென்னை உள்பட 5 நகரங்களுக்கு ஆபத்து

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் பல்லாயிரம் மக்கள் உயிரை பலி வாங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதில்லை. ஆனாலும் தமிழ்நாடு பாதுகாப்பான பகுதி இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நில நடுக்கம் 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 5–வது எண் அதிக பாதிப்புக் கொண்டதாகும். தமிழ்நாடு 3–வது நிலநடுக்க அளவீட்டில் வருகிறது. இதன்படி 6 ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு தமிழ்நாட்டில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த அளவுக்கு நிலநடுக்கம் வந்தால் சென்னை, கோவை, மதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுச்சேரி உள்ளிட்ட நகரங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சென்னையை பொறுத்தவரை ஏராளமான பழங்கால கட்டிடங்கள் உள்ளன. இவை 6 ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு நிலநடுக்கம் வந்தால் அதை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு இல்லை என்று நிபுணர்கள் சொல்கின்றனர். இதனால் சென்னையில் பேராபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் தற்போது விண்ணை முட்டும் அளவுக்கு உயரமான கட்டிடங்கள் சென்னையில் கட்டப்படுகின்றன. அவை பூகம்பத்தை தாங்கும் அளவிற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் டீன் பேராசிரியர் சாந்தகுமார் கூறியதாவது:–

தற்போது சென்னையில் கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடங்களின் கீழ் பகுதியில் கார் பார்க்கிங் வசதிக்காக தூண்கள் அமைத்து கட்டப்படுகின்றன. இந்த தூண்கள் சரியான தாங்கும் திறனை கொண்டுள்ளதா என்பதில் சந்தேகங்கள் இருக்கிறது. இதுபோன்ற தூண்கள் அமைத்து கட்டப்படும் கட்டிடங்களில் ஒவ்வொரு தூணும் குறைந்தபட்சம் ஒரு அடி அகலத்தில் இருக்க வேண்டும். 10 மாடி கட்டிடம் மற்றும் அதற்கு மேற்பட்டதாக இருந்தால் ஒரு மீட்டர் அகலத்தில் இருக்க வேண்டும். பூகம்பத்தை தாங்கும் அளவுக்கு தூண்கள் அமைக்கப்படும்போது கட்டிட செலவில் 25 சதவீதம் தூண்களுக்கே செலவிட வேண்டியது வரும். மேலும் ஒட்டுமொத்தமாக நில நடுக்கத்தை தாங்கும் கட்டிடம் கட்டுவதாக இருந்தால் 15 சதவீதத்துக்கு மேல் அதிக செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையை பொறுத்தவரை 6 ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டால் அடையாறு கரையோரத்தில் உள்ள கட்டிடங்களுக்கு மிகுந்த பாதிப்புக்கு ஏற்படும் என்று கணித்துள்ளனர். ஏனென்றால் இந்த பகுதியில் மண்கள் நெகிழ்வு தன்மையுடன் இருக்கிறது. அதேபோல கடற்கரை பகுதியில் உள்ள கட்டிடங்களும் பூகம்பத்தை தாங்குவது கடினம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக பொதுப் பணித்துறை ஆலோசகர் எமராஜிடம் கேட்டபோது, கடந்த 10 ஆண்டில் சென்னை நகரில் ஒவ்வொரு ஆண்டும் 1000 கோடி ரூபாய் அளவுக்கு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. அவை நிலநடுக்கத்தை தாங்கும் அளவிலேயே கட்டப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
இந்திய தர அமைப்பு ஆய்வில், தமிழ்நாட்டில் காவிரி, வைகை கரையோர பகுதிகள், கன்னியாகுமரி பகுதி போன்றவற்றில் பூகம்பம் வந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. இந்தியா முழுவதும் 38 நகரங்கள் நில நடுக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாத அபாயகரமான நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பூகோள அமைப்பில் சமீப ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக இந்தியாவின் நிலத்தட்டு வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது வடஇந்தியாவில் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 2005–ம் ஆண்டு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு சுமார் 80 ஆயிரம் பேர் பலியானார்கள். 2004–ம் ஆண்டு 9.3 ரிக்டர் அளவு கோலுக்கு ஏற்பட்ட பூகம்பம் 14 நாடுகளின் நிலப்பரப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்தியாவில் ஸ்ரீநகர், கவுகாத்தி இரு நகரங்களும் பூகம்ப தாக்குதலின் அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் 5–ம் நிலையில் இருப்பதாக கணித்துள்ளனர்.

டெல்லி நகரம் 4–ம் நிலையில் உள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்கள் மூன்றாம் கட்ட அபாய நிலையில் இருக்கின்றன. பூமி நிலத்தட்டு எந்த நேரத்திலும் நகரலாம். அப்போது ஆபத்து ஏற்படலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து