முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தான் அமைதி மேம்பாட்டிற்கு இந்தியா தோள் கொடுக்கும் டில்லி வந்த ஆப்கன் ஜனாதிபதியிடம் மோடி உறுதி

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புதுடில்லி: ஆப்கானிஸ்தானின் அமைதி மேம்பாட்டிற்கு இந்தியா தோள் கொடுக்கும் என்று டில்லி வந்துள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனியிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தற்போது இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரும் இந்திய பிரதமர் மோடியும் நேற்று கூட்டாக அறிக் கை வெளியிட்டனர். அப்போது ஆப்கன் ஜனாதிபதி கூறுகையில் தீவிரவாத நிழலில் இருந்து ஆப்கானிஸ்தான் இன்னும் மீளவில்லை.

எங்களது கூட்டாளிகள் சார்பில் தீவிரவாதத்தை எதிர்த்து போராடி வருகிறோம்.நாங்கள் பொருளாதாரம் ஒருங்கிணைந்த ஆசியாவினை எதிர் நோக்கியுள்ளோம் என்றார். இரு நாட்டின் வர்த்தகம் ,பொருளாதாரம்,பாதுகாப்பு மற்றும்  மக்கள் தொடர்பு ஆகியவற்றை முன்னோக்கி கொண்டுச்செல்ல முனைந்துள்ளோம் என்று இரு தலைவர்களும் தெரிவித்தார்கள். உலகளாவிய முக்கியத்துவத்தைத் கருத்தில் கொண்டு நாங்கள் ஆப்கானிஸ்தான் மக்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடப்போம் என்று மோடி கூறினார்.

ஆப்கானிஸ்தான் தேசம் ,இந்தியா மற்றும் இதர தெற்கு ஆசிய நாடுகளுடன் வான் வான் வழியாக தொடர்புகொண்டுள்ளது. கடல் வழி போக்குவரத்திலும் அதன் தொடர்பு அதிகரித்துள்ளது. ஆசியாவின் பல்வேறு பிராந்தியங்களுடன் தொடர்பு கொள்ளும் மையமாகவும் அந்த நாடு மாறும்.இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு  இடையேயான உறவு வெறும் இரண்டு நாடுகள் அல்லது அரசுகளுக்கு இடையேயான தொடர்பு என கருதக்கூடாது. ,இரு நாடுகளின் மனித இதயங்களுடன் கொண்ட தொடர்பாகும் .கடந்த 14ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிற்காக புதிய அத்தியாத்தை துவக்கினோம் இந்த சரித்திரம் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தலைமையில் துவங்கியது.

அரசியல் தடைகள் புவியியல் தடைகள் இருந்தபோதும் இருநாடுகளின் உறவு மலர்ந்துள்ளது. நாங்கள் எங்களது பயணத்தை ஆப்கன் ஜனாதிபதி கனி மற்றும் அவரது தேசிய ஐக்கிய அரசுடன் தொடர்வோம் என்று மோடி தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் நல்ல மாற்றம் ஏற்படும் வரை மட்டுமல்ல அந்த நாட்டிற்கு இந்தியா அளிக்கும் உதவி அளவற்றதாக இருக்கும் என்றும் மோடி கூறினார். ஆப்கானிஸ்தான்மேம்பாட்டிற்கு இந்தியா 200கோடி அமெரிக்க டாலர்களை நிதி உதவி அளிக்கிறது .இந்தியாவின் இந்த உதவிக்கு நன்றி தெரிவிப்பதாக ஆப்கன் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் இந்திய நிதியுதவியுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படுகிறது. அந்த கட்டிடத்தை  திறந்து வைப்பது மட்டுமல்லாமல் பாமியன் பள்ளத்தாக்கிற்கும் மோடி வர வேண்டும்என ஆப்கன் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார். ஆப்கானிஸ்தானின் உள் கட்டமைப்பு,கல்வி,வேளாண்துறை முன்னேற்றம் அடைவதற்கு அதிக அளவில் நிதி அளித்த 6வது நாடாக இந்தியா உள்ளது. எனது சந்ததி கடந்த 1950ம் ஆண்டு முதல் இந்திய மக்களுடனும் இந்திய சரித்திரத்துடனும் வளர்ந்தது. அபுல் கலாம் ஆசாத் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் வெறும் பெயர்கள் அல்ல அவர்கள் சரித்திரங்கள் என்றும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி புகழாரம் சூட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து