முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே அறிய செயற்கைக் கோள்கள்: இஸ்ரோ ஏவுகிறது

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேரிடர்களை அறிய 3 செயற்கைகோள்கள் 9 ஆம் தேதி ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் கிரண்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அவர், "உலகில் ஏற்படும் சுனாமி, பூகம்பம் போன்ற பேரழிவு பேரிடர்களை முன்னதாக அறிந்து மக்களை பாதுகாக்க வசதியாக 3 செயற்கைகோள்களை இஸ்ரோ தயாரித்து வருகிறது.அதற்கான பணிகள் நிறைவடைந்து ஜூன் 9 ஆம் தேதி விண்ணில் செலுத்த இருக்கிறோம். தரை வழி, கடல் வழி, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றிற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.சை சேர்ந்த 7 செயற்கைகோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதில் 4 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு விட்டன. 5 ஆவது செயற்கைகோள் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 6 மற்றும் 7 ஆவது செயற்கைகோள்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விண்ணில் அனுப்பப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து