முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியபோதிலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக அவ்வப்போது பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் இன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நேற்று கூறியதாவது:-

குமரி கடல் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மேலடுக்கு சுழற்சி லட்சத்தீவு பகுதியில் தொடர்ந்து நிலைகொண்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும்.

காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர் மாவட்டம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று  கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் வானம் தெளிவாக காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று முன்தினம்காலை 8.30 மணியோடு நிறைவடைந்த கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் பதிவாகிய மழை அளவு விவரம் வருமாறு:-

போடிநாயக்கனூரில் அதிகபட்சமாக 7 செ.மீ., சிவகிரி, பொள்ளாச்சி, சேந்தமங்கலம் பகுதிகளில் தலா 5 செ.மீ., வால்பாறை, ஊட்டி பகுதிகளில் தலா 4 செ.மீ., திருக்கோவிலூர், சங்கரன்கோவில், நாமக்கல் பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

சோழவந்தான், செங்கோட்டை, சிவகாசி, பெரியகுளம், தென்காசி, ராஜபாளையம் பகுதிகளில் தலா 2 செ.மீ., பேச்சிப்பாறை, நன்னிலம், சேலம், மன்னார்குடி, காட்டுமன்னார்கோவில், திருவையாறு, சென்னை, திருச்செந்தூர், கயத்தாறு, பரமக்குடி பகுதிகளில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து