முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஸ்டான்லி மருத்துவமனை அழகியல் துறையில் ஒன்றரை ஆண்டில் 10 ஆயிரம் பேருக்கு சிகிச்சை: டீன், துறைத்தலைவர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - அரசு ஸ்டான்லி மருத்துவமனை அழகியல் துறையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 10 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.சென்னை அர சு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அழகியல் துறை கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த துறை பற்றி மருத்துவமனை டீன் டாக்டர் கார்குழலி, துறைத் தலைவர் டாக்டர் ஜி.ஆர்.ரத்னவேல் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளிலேயே, முதல் முறையாக இந்த மருத்துவ மனையில்தான் அழகியல் துறை தொடங்கப்பட்டுள்ளது. இந்த துறையில் வழுக்கை தலையில் முடி வளர வைக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 15 கோடி பேர் வெண்புள்ளி (Vitiligo) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு 5 முறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெண்புள்ளி நோயை 90 சதவீதம் குணப்படுத்திவிடலாம்.உடல் எடையை குறைத்தல், கொழுப்பு கட்டியை நீக்குதல், மரு, முகப்பருக்கள், தழும்புகள் மற்றும் தேவையில்லாத ரோமத்தை அகற்றுதல் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

அதேபோல இழந்த இளமையை மீட்கவும், தோல் சுருக்கத்தை போக்கவும், முகம் பொலிவுடன் இருக்கவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உள்ளங்கைகள், உள்ளங்கால் களில் அதிகப்படியான வியர்வையை தடுக்கவும், பெண்கள் தங்களுடைய மார்பகத்தை பெரிதாக அழகாக மாற்றுவதற்கும் ‘போடாக்ஸ்’ ஊசியை போட்டுக்கொள்ளலாம்.

சில சினிமா நடிகர்கள், நடிகை கள் மற்றும் வசதி படைத்தவர்கள் இளமையான தோற்றத்துக்காக தனியார் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கில் செலவழிக் கின்றனர்.தனியார் மருத்துவமனையில் அழகுக்காக லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படும் அனைத்து சிகிச்சைகளும் இங்கு இலவசமாக செய்யப்படுகின்றன. இந்த மருத்துவமனையில் அழகியல் துறை தொடங்கப் பட்டதில் இருந்து இதுவரை (ஒன்றரை ஆண்டுகள்) 10 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து