முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி சுடும் தற்காலிக மையம் அமைச்சர் சுந்தரராஜ் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை நேரு விளையாட்டரங்கில் துப்பாக்கி சுடும் தற்காலிக  மையத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் ஏ.சுந்தரராஜ் திறந்து வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள்  மற்றும் இளைஞர்களுக்கான துப்பாக்கி சுடும் மையம் ஆவடியை அடுத்த  வீராபுரத்தில் செயல்பட்டு வந்தது. அதில் 30 மாணவிகள் உள்பட 70 பேர் பயிற்சி  பெற்று வந்தனர்.

அம்மையத்தில் மறுசீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று  வருவதையொட்டி,  துப்பாக்கி சுடும் தற்காலிக மையம் நேரு விளையாட்டரங்கில்  அமைக்கப்பட்டுள்ளது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஏ.சுந்தரராஜ் கலந்துகொண்டு மையத்தை  திறந்துவைத்தார். அதன் பின்னர் மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுவதை அமைச்சர் பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து விளையாட்டுத்துறை சார்பில் கோடை விளையாட்டு பயிற்சி  வகுப்புகளைத் தொடங்கி வைத்தார்.  பின்னர் அவர் பேசும்போது, ‘‘கல்விக்கு  மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வரும் பெற்றோருக்கு மத்தியில் உடல்  ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து, விளையாட்டு பயிற்சியில்  சேர்க்க பெற்றோர்கள் வருவது தற்போது அதிகரித்துள்ளது.

தற்போது  தொடங்கப்பட்டுள்ள கோடை வகுப்புகளில் தடகளம், கூடைப் பந்து, குத்துச்சண்டை,  கிரிக்கெட் உள்ளிட்ட 14 வகை விளையாட்டுகளுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது.  இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார். விளையாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஹேமந்த் குமார் சின்ஹா, தமிழ்நாடு  விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் சம்பு கல்லலிக்கர்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து