முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

51வது சர்வதேச பாரிஸ் வான்காட்சிக்கு இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

சென்னை - அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் பயணம் மேற்கொண்டதை யொட்டியும், பல விமானப்போக்குவரத்து மற்றும் ராணுவ ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டதை யொட்டியும், பிரான்ஸில் நடைபெறும் 51வது சர்வதேச பாரிஸ் வான்காட்சிக்கு வருமாறு இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது இந்தியா - பிரான்ஸ் இடையேவிமான, ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும்  உலகின் முன்னணி நிறுவனங்களின் அதிநவீன விமானங்களும், வான்வெளி சாதனங்களும், புதிய வான்வெளித் தொழில் நுட்பக்கண்டுபிடிப்புகளும் அதிநவீன போர்விமானங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ள இக்கண்காட்சி புதிய ஒத்துழைப்புகளுக்கான வாய்ய்ப்புகளை இந்தியா கண்டறிய உதவும்.

பாரீஸ் வான்கண்காட்சி 2015 ஜூன் 15 முதல் 21 வரை லெபோர்கெட் கண்காட்சி மையத்தில் நடைபெறுகிறது. வான்வெளித்துறையில் ஈடுபடும் பிரெஞ்சு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் கூடுதல் ஒத்துழைப்புகள் பெறவும் அறிவுபெறவும் இந்திய நிறுவனங்களுக்கு இதனால் பலவாய்ப்புகள் உருவாகும். உலகின் அனைத்து முன்னணி விமானத் தொழில்நுட்பநிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன. அமெரிக்காவின் 350 நிறுவனங்கள் இக்கண்காட்சியில் 4,000 சதுரமீட்டர்பரப்பில் இடம் பெறுகின்றன. அடுத்ததாக பிரெஞ்சு வான்வெளி நிறுவனங்களின் அதிநவீன விமானங்களும் 2,200 சதுரமீட்டர்பரப்பில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

எனவே பிரெஞ்சு மற்றும் பன்னாட்டு வான்வெளித் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சந்திக்கவும் அவர்களுடன் வலைப் பிண்ணலை ஏற்படுத்திக் கொள்ளவும் வணிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் இத்துறைகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு பாரிஸ் வான்கண்காட்சி அரியவாய்ப்பாகும்.என்று பாரிஸ் வான்கண்காட்டி தலைமை நிர்வாக அலுவலரும் தலைவருமான ஈமெரிக்டெ ஆர்கிமோல்ஸ் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து