முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு தமிழக அரசு ரூ. 5 கோடி நிதியுதவி

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015
Image Unavailable

சென்னை: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு,

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் மிகப் பெருமளவு உயரிழப்புகளும், சொத்துக்களும் இழக்கப்பட்டுள்ளன. நேபாள மக்கள் மற்றும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பீகார், மேற்கு வங்க மாநிலங்களின் மக்கள் மிகப்பெரும் துயரத்தை அடைந்திருக்கிறார்கள். நேபாளத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்டவர்களும், சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்திலிருந்து நேபாளத்திற்கு சென்ற சுற்றுலாபயணிகளும் அந்த நாட்டின் புனித தலங்களுக்கு சென்ற பக்தர்களும் பரிதவித்திருந்தனர். அவர்கள் பத்திரமாக தமிழகம் திரும்புவதற்கு தமிழக அரசு ஏற்கனவே சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. தமிழகத்திலிருந்து நேபாளத்திற்கு சென்ற பக்தர்களின் உறவினர்கள் தொடர்பு கொள்வதற்காக புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தொலைபேசியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதே போன்று சென்னையில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் மற்றும் பேரிடர் நிர்வாக அலுவலகம் ஆகியவற்றில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இலவச தங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

நிலநடுக்கப்பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு உதவிக் கரம் நீட்டும் வகையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி நேபாள அரசுக்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதியுதவியை வழங்குகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து