முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவுனுக்கு ரூ. 90 அதிகரிப்பு : தங்கம் விலை தொடர்ந்து உயர்வு

புதன்கிழமை, 29 ஏப்ரல் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - தங்கம் விலை பவுனுக்கு ரூ. 96 உயர்ந்துள்ளது. சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 25ம் தேதி பவுன் ரூ. 20 ஆயிரத்து 184ஆக இருந்தது. அதை தொடர்ந்து விலை ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த திங்களன்று பவுனுக்கு ரூ. 40 உயர்ந்தது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 200  அதிகரித்து ரூ. 20 ஆயிரத்து 424 ஆனது. நேற்று மேலும் ரூ. 96 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 20 ஆயிரத்து 520 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ. 12 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 2,565க்கு விற்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் விலை உயர்வு போன்ற காரணங்கள் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ. 325 உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ ரூ. 37 ஆயிரத்து 730 ஆகவும், ஒரு கிராம் ரூ. 40.40 ஆகவும் உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து