முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் பிரச்சினைக்காக பாதயாத்திரை மகராஷ்டிராவில் ராகுல் தொடங்கினார்

வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

அமராவதி - காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி பாதயாத்திரையை மகாராஷ்டிரத்தில் நேற்று பாதயாத்திரையை தொடங்கியுள்ளார்.  அமராவதி மாவட்டத்தின் விதபார்வா பகுதியில் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் அவர், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பாதயாத்திரையை சன்வத் பாதயாத்திரை என காங்கிரசார் கூறுகின்றனர்.  ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சாலை வழியாக நடந்து பல கிராமங்களுக்கு செல்ல இருக்கும் ராகுலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக முன்னிறுத்தப்படும் ராகுல், இடைக்கால ஓய்வை முடித்துக் கொண்டு பாஜகவுக்கு எதிராக தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறார். டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பொதுக் கூட்டத்திலும் சரி, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து பட்ஜெட் தொடரில் அவர் பேசுகையிலும் சரி, காங்கிரசாருக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறதாம். எனவே, காங்கிரஸ் கட்சியை விவசாயிகள் மட்டத்தில் வேரூன்றச் செய்வதற்காகவே அவர்களின் பிரச்சினையை முன்னெடுத்து பாதயாத்திரை செல்ல ராகுல் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.  காங்கிரஸ் துவண்டபோதெல்லாம் விவசாயிகளின் பிரச்சினையைக் கையிலெடுத்து மீண்டும் தனது பலத்தை நிரூபித்திருக்கிறது. அந்த வியூகம் தற்போது வெற்றியை அளிக்கும் என்று ராகுல் நம்புவதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து