Idhayam Matrimony

ராகுல் காந்தியின் விவசாயிகள் யாத்திரை வேதனை யாத்திரை: பா.ஜ.க கிண்டல்

வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி - ராகுல் காந்தியின் விவசாயிகள் யாத்திரை வேதனை யாத்திரையாகும். தங்களது ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட கொள்கைகள் தோல்வி அடைந்ததால் வேதனைப்பட்டு மேற்கொண்ட யாத்திரையாக ராகுலின் யாத்திரை இருந்தது என பா.ஜ.க கூறியது.பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சம்பீட் பத்ரா நேற்று கூறியதாவது:
ராகுல் காந்தி விவசாயிகளுக்கான யாத்திரை நடத்தி இருக்கிறார் .அந்த  யாத்திரை தங்களது ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகள் தோல்வியடைந்ததை எண்ணி அவர் மேற்கொண்ட யாத்திரையாக அமைந்திருக்கிறது.மகாராஷ்டிராவில் கடந்த 95ம்ஆண்டு முதல் 2013ம்ஆண்டு வரை காங்கிரஸ்- தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது.

அந்த ஆட்சிக்காலத்தில்தான் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்தனர். இந்த புள்ளி விவரம் தேசிய குற்றப்பிரிவு ஆவணங்களில் உள்ளன. இதற்கு ராகுல் காந்தி  என்ன சொல்லப்போகிறார்.மோடி அரசு தற்போது விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. குறுகிய காலத்தில்  பா.ஜ.க அரசு விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து