முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிஎஸ்என்எல் லேண்ட்லைன் சந்தாதாரர்களுக்கு சிறப்பு சலுகை: நேற்று முதல் அமல்

வெள்ளிக்கிழமை, 1 மே 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை,  பிஎஸ்என்எல் லேண்ட்லைன் சந்தாதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்புச் சலுகை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி பிஎஸ்என்எல் பொதுமேலாளர் லீலாவதி வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள சந்தாதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. மே 1-ம் தேதி (நேற்று)முதல் பிஎஸ்என்எல் லேண்ட் லைனில் இருந்து இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இந்தியா முழுவதும் அனைத்து நெட்வொர்க்கிலும் உள்ள லேண்ட்லைன் மற்றும் மொபைல் இணைப்புகளுக்கு இலவசமாக கால்களைப் பேசும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மையான பிஎஸ்என்எல் லேண்ட்லைன் ஜெனரல் பிளான்களுக்கும், ஸ்பெஷசல் பிளான்களுக்கும் குறிப்பிட்ட பிராட்பேண்ட் கோம்போ பிளான்களுக்கும் இச்சலுகை பொருந்தும். மேலும் இந்த பிளான்களில் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கும் புதிய இணைப்பு பெறுவோருக்கும் இச்சலுகை பொருந்தும்.அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்களில் இதுகுறித்த விவரங்களை

அறிந்துகொள்ளலாம்.இதுவரை எந்த நிறுவனமும் வழங்காத மிகச்சிறந்த சலுகையைப்பெற பிஎஸ்என்எல் லேண்ட்லைன் வாடிக்கையாளராகலாம் என்றார் லீலாவதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
வாசகர் கருத்து

2 கருத்துகள்

  1. Anonymous May 14, 15:06

    முதலில் விழித்துக்கொண்டு இருக்கும் பகல் நேரத்தில் சரியாக டெலிபோன் வேலை செய்யட்டும். பிறகு இந்த சலுகை நேரத்தில் பேச முயற்சி செய்வோம்.

    Reply to this comment
  2. Anonymous May 17, 22:39

    யாருக்கு பொருந்தாது என்பதையும் தெளிவு படுத்துவது நல்லது. இல்லையென்றால் உபயோகித்த பின் பணம் செலுத்த நேரிடும்

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து