முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் லட்டு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை: தேவஸ்தான அதிகாரி தகவல்

சனிக்கிழமை, 2 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை, பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் திருப்பதியில் லட்டு தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தேவஸ்தான அலுவலர் சாம்பசிவராவ் தெரிவித்தார்.

திருப்பதி தேவஸ்தான அலுவலர் சாம்பசிவராவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:

திருமலையில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் பக்தர்களின் தேவைக்காக குடிநீர் பிரச்னையை தீர்க்க தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோடை காலத்தில் தண்ணீர் தட்டுபாடு இல்லாமல் இருப்பதற்காக தெலுங்கு கங்கா திட்டத்தின் கீழ் 7 எம்எல்டி தண்ணீர் பெறப்பட்டு வருகிறது. இதனால் வரும் 150 நாட்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது. மேலும் பக்தர்களின் வசத்திக்காக நான்கு மாட வீதிகள் மற்றும் கோயிலின் வெளிப்புறம் நிழற் பந்தல்கள் அமைத்து வெப்பம் தெரியாமல் இருப்பதற்காக குளிர் பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு சேவை செய்வதற்காக 2500 ஸ்ரீவாரி சேவா பக்தர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

பக்தர்கள் மொட்டைகள் அடிக்கும் போது தரமற்ற பிளேடுகளை உபயோகிப்பதாக புகார்கள் வந்துள்ளது. எனவே அதனை மாற்றி தரமான பிளேடுகள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மொட்டையடிக்கும்போது நீண்ட நேரம் காத்திருக்காமல் இருப்பதற்காக கல்யாண  கட்டாவில், கூடுதலாக ஸ்ரீவாரி சேவகர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மின் கல்யாண கட்டாவில் மொட்டையடிக்க ரூ.10 பெறப்பட்டது. இனிமேல் இலவசமாக மொட்டையடிக்கப்படும். திருமலையில் உள்ள 7 ஆயிரம் அறைகள் பக்தர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் அவர்களுக்கு லட்டு தட்டுபாடு இல்லாமல் கிடைக்க 6 லட்சம் லட்டுகள் ததயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பக்தர்கள் தரிசனத்துக்காகவோ இடைத்தரகர்களை நாட வேண்டாம். மேலும் பக்தர்கள் புகார்கள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்றால் தேவஸ்தான இலவச அழைப்பு எண்ணான 08772277777 எண்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து