முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் மீண்டும் நில நடுக்கம்,பலி எண்ணிகை 7ஆயிரத்தை நெருங்கியது

சனிக்கிழமை, 2 மே 2015      உலகம்
Image Unavailable

காத்மாண்டு - நேபாளத்தில் நேற்று மீண்டும் 4.5ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்தது. கடந்த மாதம் இறுதியில் அந்த நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக் கை 6ஆயிரத்து 624ஐ எட்டியது 14ஆயிரத்து 25பேர் காயம்அடைந்தார்கள். நில நடுக்கத்தில் பல ஆயிரம் பேர் மாயமாகி இருக்கிறார்கள். மீட்புக்குழு செல்ல முடியாத இடங்களில் இறப்பு எண்ணிக் கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதியன்று 7.9ரிக்டர் அளவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.இந்த நில நடுக்கத்தில் இதுவரை 6ஆயிரத்து 624பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த இறப்பு எண்ணிக் கை விவரத்தை நேபாள உள்துறை அமைச்சகத்தின் தேசிய பேரிடர் மையம் தெரிவித்தது.
நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.

அவர்கள் உயிரை காப்பாற்றிகொள்ள திறந்த வெளியை நோக்கி ஓடினார்கள்.இமய மலை தேசமான நேபாளத்தில் மிகவும் பின் தங்கிய பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அந்த இடங்களில் மீட்புப்பணிகள் நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டது.நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என சர்வதேச மனித நேய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. நேபாளத்தில் உள்ளசவுதாரா என்ற இடத்தில் 90சதவீத வீடுகள் சேதமடைந்தன. அங்குள்ள மருத்துவமனைகளும் நொறுங்கி விழுந்தன. மக்கள் இடிபாடுகளில்இருந்து வெளிவர போராடினர். சிந்துபால் சவுக் மாவட்டத்தில்  40ஆயிரம் வீடுகள் சேதமடைந்தனஎன்று செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச அமைப்பு தெரிவித்தது.

நில நடுக்கத்தில் எவரெஸ்ட் சிகரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் பயணம் செய்தவர்கள் பலர் உயிரிழந்தனர்.நில நடுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் மாயமாகி இருக்கிறார்கள். பின் தங்கிய பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு அளிக்க முடியவில்லை.இதனால் உயிர் பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.உரிமைக்கோரப்படாத பிணங்கள் உடனடியாக தகனம் செய்யப்பட்டன. அந்த பகுதியில் இறந்த உடல்களால் தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக உடல்கள் தகனம் செய்யப்பட்டன.
நேபாளத்தில் உள்ள  எவரெஸ்ட் சிகரப்பகுதிக்கு ஆயிரக்கணக்கான ஐரோப்பிய ஒன்றிய மக்கள் வந்தனர். அவர்களது நிலமை என்னவென்றும் தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து