முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் ராமச்சந்திரன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

சனிக்கிழமை, 2 மே 2015      விளையாட்டு
Image Unavailable

சென்னை - இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக  தமிழகத்தைச்சேர்ந்த என்.ராமச்சந்திரன் உள்ளார். அவர் மீது பவுலிங் பெடரேஷன் ஆப் இந்தியா நம்பிக் கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே ஹாக்கி இந்தியா அமைப்பு ஒலிம்பிக் சங்க தலைவர் மீது நம்பிக் கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. பவுலிங் பெடரேஷன் ஆப் இந்தியாவின் தலைவர் சுனைனா குமாரி மற்றும் பொதுச்செயலாளர் டி.ஆர் சைனி ஆகியோர் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.அவர்களது கடிதத்தில் என் .ராமச்சந்திரன் மீது நம்பிக்கை இல்லா நிலை இருப்பதாகவும் எனவே அவரை நீக்குவதற்கு ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

ஒலிம்பிக் அரசியலமைப்பின் விதி8(i) மற்றும்(II) ன் கீழ் பவுலிங் பெடரேஷனை சேர்ந்த நாங்கள் என்.ராமச்சந்திரனுக்கு எதிராக நம்பிக் கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருகிறோம்.அவருடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுக்கு உடன் பாடு இல்லை.அவர் ஒலிம்பிக் சங்கத்தை பலவீனப்படுத்தும் வகையிலும் சங்கத்தை நிலை குலைக்கும் வகையிலும் செயல்படுகிறார்.எனவே ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு குழு கூட்டத்தை நடத்தி ராமச்சந்திரன் மீது நம்பிக் கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுஇருக்கிறார்கள்.

பவுலிங் பெடரேஷன் இந்தியா நிர்வாகிகள் ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளருக்கு முகவரியிட்டு இந்த கடிதத்தை அனுப்பி இருக்கிறார்கள்.ஏற்கனவே ஹாக்கி இந்தியாவின் தலைவர் நரீந்தர் பத்ரா ஒலிம்பிக் சங்க தலைவர் மீது நடவடிக் கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அவர் போர்கொடி எழுப்பிய 2நாளில் பவுலிங் பெடரேஷன் தற்போது தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.ஒலிம்பிக் சங்க தலைவர்,பொதுச்செயலாளர்,பொருளார் ஆகியோர் மீது நடவடிக் கை எடுக்க பொதுக்குழு கூட்டத்தில் 3ல் 2பங்கு உறுப்பினர்களின் வாக்குகள் பெறப்பட வேண்டும்.

இந்தவாக்கெடுப்பை நடத்துவதற்கு 4ல் 3பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று இருக்க வேண்டும்.இந்திய ஒலிம்பிக் சங்க பொதுக்குழுவில் 183வாக்குகள் உள்ளன. தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு தலா 3வாக்குகளும் மாநில ஒலிம்பிக் அமைப்புகளுக்கு தலா 2வாக்குகளும் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து