முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசா மோசடி: அமெரிக்காவில் 3 இந்தியர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க்: அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கு வதாகவும், கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் அரசை ஏமாற்றி வந்த 3 இந்தியர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க குடியேற்றத்துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு ஆகியவை மேற்கொண்ட நீண்ட நாள் விசாரணைக்குப் பிறகு, கடந்த 2014ம் ஆண்டு சுரேஷ் ஹிராநந்தானி(61), லலித் சப்ரியா(54), அனிதா சப்ரியா(50), சமீர் ஹிராநந்தானி(28) மற்றும் சீமா ஷா(42) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் `மைக்ரோபவர் கரீர் இன்ஸ்டி டியூட்' மற்றும் `இன்ஸ்டி டியூட் ஃபார் ஹெல்த் எஜுகேஷன்' என்ற கல்வி நிறுவனங் களை நடத்தி வந்தனர். தாங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் மூலம் வெளிநாட்டு மாணவர் களுக்கு சட்டத்துக்குப் புறம்பாக விசா வழங்கியும், கல்வி நிதி உதவி அளிப்பதாகவும் கூறி அமெரிக்க அரசை ஏமாற்றி வந்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் மன்ஹாட்டன் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தப் பட்டனர்.

அப்போது இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரீத் பராரா  கூறுகையில், அமெரிக்க நாட்டின் வெளிநாட்டு மாணவர் விசா திட்டத்தையும், உள்ளூர் மாணவர்களுக்கு வழங் கப்படும் கல்வி உதவித் தொகை திட்டத்தையும் தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்த, தங்களின் கல்வி நிறுவனங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தி யுள்ளார்கள்' என்று கூறினார்.

தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர்கள், தங்களிடம் வசூலான 7.4 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் (சுமார் ரூ.44 கோடி) அமெரிக்க அரசிடம் திருப்பித் தரவும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளான சுரேஷ் ஹிராநந்தானி, லலித் சப்ரியா, அனிதா சப்ரியா ஆகியோ ருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட் டுள்ளது. மற்ற இருவரும் குற்றத் துக்கு உதவிய வழக்கை எதிர்கொண்டுள்ளனர்.

அமெரிக்க சட்டத்தின்படி, வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்குப் படிக்க வரும் மாணவர், தான் பயிலும் கல்வி நிறுவனத்தின் வகுப்புகளுக்கு முறையாக வராமல் இருந்தால் அது குறித்து அந்நாட்டு குடியேற்றத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால், அந்த அதிகாரிகள் அந்த மாணவரின் விசாவை ரத்து செய்வார்கள்.

ஆனால், ஹிராநந்தானி மற்றும் அவரது சகாக்கள், இவ்வாறு வகுப்புகளுக்கு முறையாகச் செல்லாத மாணவர்கள் குறித்து குடியேற்றத்துறை அதிகாரிகளுக்கு எந்தத் தகவலும் தரவில்லை. மேலும், அந்த மாணவர்களின் வருகைப் பதிவை சரிகட்டுவதற்காக, அவர்களிடமிருந்து நிறைய தொகையை வசூலித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து