முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் கொள்ளையர்களால் இந்தியப் பெண் சுட்டுக் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தியப் பெண் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொள்ளை முயற்சியின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் தாராப்பூரைச் சேர்ந்தவர் மிர்துளாபென் பட்டேல் என்ற 60 வயது பெண். இவர் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் கேஸ் கடை ஒன்றை இன்னொருவருடன் சேர்ந்து நடத்தி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியில் இருந்த மிர்துளாவை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த மிர்துளா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொள்ளை முயற்சியின் போது இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இது இனவெறி தாக்குதல் இல்லை என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொலை நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் கொலையாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மிர்துளாபென் பட்டேல் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் குடியுரிமைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து