முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். டி20: வார்னர் அதிரடியால் ஐதராபாத் வெற்றி தொடர்ந்து இரண்டாவது தோல்வி சென்னை

ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2015      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத்: ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் வார்னர் அதிரடியால் சென்னை அணியை வீழ்த்தியது ஐதராபாத்.  முதலில் ஆடிய ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 192 ரன்களை குவித்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சென்னை முதலில் பேட் செய்த டேவிட் வார்னர் அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்து விட்டார். சிறப்பாக ஆடிய அவர் 61 ரன்களைக் குவித்தது ஹைதராபாத் அணி பெரும் ஸ்கோரை எட்ட வழி வகுத்தார். மறுபக்கம் ஷிகர் தவன் சிறப்பாக ஆடி ஸ்கோர் ஏறுவதை பார்த்துக் கொண்டார். அவர் 37 ரன்கள் குவித்தார். ஹென்றிக்ஸ் வந்த வேகத்தில் 9 பந்துகளில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரிகளுடன் 19 ரன் சேர்த்துக் கொடுத்து வெளியேறினார். மறுபக்கம் இயான் மார்கன் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

இயான் மோர்கன் 27 பந்துகளில் 32 ரன்களைக் குவித்தார். அவருடன் நமன் ஓஜா துணை நின்று சிறப்பாக ஆடி 12 பந்துகளில் 20 ரன்களைக் குவித்தார். இது ஸ்கோர் வேகமாக ஏற உதவியாக அமைந்தது. பிராவோ கடைசி நேரத்தில் பவுலிங்கில் அசத்தினார். கடைசி நேரத்தில் அவர் 3 விக்கெட்களைச் சாய்த்தார். ஆனால் அதற்குள் ஹைதராபாத் அணி 192 ரன்களை எடுத்து விட்டது. ஐதராபாத் அணி 20 ஓவர்களுக்கு 192 ரன்களை குவித்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஜோடி சேசிங்கில் சற்று சொதப்பியது. ஸ்மித் 21, மெக்கல்லம் 12 என விழ, ரெய்னா சற்று வேகம் காட்டி 23 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். சிற்பபாக விளையாடி வந்த பாப் டு பிளஸ்ஸிஸ் 22 பந்துகளில் 33 ரன்கள் குவித்த நிலையில் ரன் அவுட் ஆனார். கேப்டன் டோணி வேகமாக ஆடி 16 பந்துகளில் 20 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தாரா்.

கடைசி வரிசையில் பிராவோ கடுமையாகப் போராடிப் பார்த்தார். 20 பந்துகளில் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் 12 பந்துகளில் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் ஜடேஜா. ஆனாலும் 22 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்திடம் வீழ்ந்தது சென்னை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து