முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குத்துச்சண்டை போட்டி: பிலிப்பைன்ஸ் வீரர் மானியை வீழ்த்தி சாம்பியன் ஆனார் அமெரிக்காவின் மேவெதர் பரிசு தொகையாக ரூ.1,143 கோடியை தட்டிச்சென்றார்

ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2015      விளையாட்டு
Image Unavailable

லாஸ் வேகாஸ்: அமெரிக்காவில் நடந்த நூற்றாண்டின் குத்துச்சண்டை போட்டியில் அமெரிக்க வீரர் பிளாய்ட் மேவெதர் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மானி பாகுயாவோவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நூற்றாண்டின் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்க வீரர் பிளாய்ட் மேவெதர் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மானி பாகுயாவோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் மேவெதரின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. போட்டிக்கான மூன்று நடுவர்கள் தங்களின் புள்ளி விவரங்களை அளித்தனர். அதில் 118-110, 116-112, 116-112 என்ற புள்ளி கணக்கில் மேவெதர் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் 38 வயதாகும் மே வெதர் தான் பங்கேற்ற 48 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். 19 ஆண்டுகளாக மேவெதர் தான் கலந்து கொண்ட ஒரு போட்டியில் கூட தோல்வி அடைந்தது இல்லை. நூற்றாண்டு குத்துச்சண்டை போட்டியை வென்ற அவருக்கு ரூ.1,143 கோடி பரிசுத் தொகை கிடைத்துள்ளது. ஒரு மணிநேரம் நடந்த இந்த வெல்டர் வெயிட் போட்டியில் மேவெதர் ஆயிரம் கோடி ரூபாய் சம்பாத்தித்துள்ளார். அவருக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள சாம்பியன் பெல்ட் வழங்கப்பட்டது.

இந்த போட்டியை 17 ஆயிரம் பேர் நேரில் கண்டு களித்தனர். மே வெதர் வெற்றி பெற்றதாக அறிவித்த உடன் மானியின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் கோஷமிட்டனர். 35 வயதாகும் மானி இதுவரை 57 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார், 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார், 2 போட்டிகளை சமன் செய்துள்ளார். 12 சுற்றுகள் கொண்ட போட்டியில் முதல் சில சுற்றுகளில் மானி மேவெதரின் முகத்தில் வலுவாக குத்தினார். ஆனால் தொடர்ந்து அவரால் மேவெதரை தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து