முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.12 கோடி மோசடி சிஏஜி குற்றச்சாட்டு - மத்திய அமைச்சர் கட்கரி பதவி விலக கோரி காங்கிரஸ் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு சொந்தமான நிறுவனம் ரூ.12 கோடி மோசடி செய்ததாக சிஏஜி அளித்துள்ள அறிக்கையால் அவருக்கு சிக்கல் எழுந்துள்ளது. அவரை பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு சொந்தமான நிறுவனம் ரூ.12 கோடி முறைகேடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், நிதின் கட்கரிக்கு சொந்தமான புர்தி சாகர் கர்கானா என்ற நிறுவனம் மத்திய அரசின் மாற்று எரிசக்தி துறையில் இருந்து ரூ.84 கோடிக்கு கடன் உதவி பெற்றுள்ளது. இதில் ரூ.72 கோடியை மட்டுமே திருப்பி செலுத்தி அந்த நிறுவனம் ரூ.12 கோடி நிலுவை தொகையை திருப்பி செலுத்தவில்லை. இந்த நிறுவனத்தில் கட்கரியும் ஒரு பங்குதாரராக உள்ளார் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும் இதன் மூலம் வாங்கிய கடனை நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தியதாகவும் அதில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. தற்போது  இந்த விவகாரம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது தற்போது இந்த விவகாரத்தில் நிதின் கட்கரி மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக பாய்ந்துள்ளன. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அப்படி நடந்து விட்டது, இப்படி நடந்து விட்டது என்று ஏகப்பட்ட ஊழல் நடந்து விட்டது என்று பாஜவினர் கூறிவந்தனர்.

தற்போது சிஏஜி அறிக்கையில் தெளிவாக நிதின் கட்கரி மீது குற்றம் சாட்டு உள்ளது. தற்போது பாஜ என்ன சொல்கிறது? இந்த விவகாரத்தில் விசாரணையை எதிர்கொள்ளும் வகையில் நிதின் கட்கரி பதவி விலக வேண்டும். முறையான நீதி விசாரணையை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகலை புர்தி நிறுவனம் மறுத்துள்ளது. இது குறித்து அது வெளியிட்டுள்ள செய்தியில் நாங்கள் ஒரே தவணையில் அனைத்து கடன் தொகையையும் அரசுக்கு செலுத்தி விட்டோம் என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து