முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது: 25 நாள் நீடிக்கும், தமிழகம் புதுவையில் மழைக்கு வாய்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் இன்று தொடங்கி 25 நாள் நீடிக்கும். இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் மக்களை வாட்ட தொடங்கியது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில்  105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. சேலம் மாவட்டத்தில் 108 டிகிரியை வெயில் எட்டியது. வெப்ப சலனம் காரணமாக கடந்த மாதம் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்தது. ஆனால் கடந்த வாரம் மறுபடியும் வெயில் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. 100.4 டிகிரி வெயில் பதிவானது. அதேபோல் நேற்று முன்தினம் 103 டிகிரி வெயில் பதிவானது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது.கடந்த ஆண்டு கத்திரி வெயிலின் தாக்கம் காரணமாக  வேலூர், அரக்கோணம், திருத்தணி, மீனம்பாக்கம் பகுதிகளில் 118 டிகிரி வரை வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்த ஆண்டு கத்திரி வெயில் நாளை தொடங்கி 25 நாட்கள் நீடிக்கும். 110 டிகிரி வரை வெயில் கொளுத்தி மக்களை வாட்டி வதைக்கும் என தெரிகிறது.

தப்பிப்பது எப்படி? கத்திரி வெயில் காரணமாக உடலில் நீர்சத்து குறையும், பலவீனமானவர்களுக்கு உடல்நிலை பாதிக்கும் வாய்ப்பு அதிகம். இதனால் வயதானவர்கள், சர்க்கரை, ரத்த கொதிப்பு நோய் உள்ளவர்கள், குழந்தைகள் பகல் நேரத்தில் வெயிலில் சுற்றுவதை தவிர்க்கவேண்டும். அப்படி சுற்ற நேர்ந்தால் தொப்பி, குடை போன்றவைகளை பயன்படுத்த வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்த்தல் வேண்டும். கடைகளில் விற்கப்படும் வாட்டர் பாக்கெட்களை வாங்கி குடிக்கக்கூடாது. அதிகமாக தண்ணீர் குடிக்கவேண்டும். கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை பருகினால் நல்லது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் முருங்கை கீரை, மோர், பழச்சாறு அருந்துதல், வெப்பத்தை உள்வாங்காத வெள்ளை காட்டன் உடைகள் அணிந்து வந்தால் ஓரளவு வெயிலில் இருந்து தப்பிகலாம். தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடையின் உச்சக்கட்டமான ‘அக்னி’ நட்சத்திரம் இன்று (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. கோடை வெயில் அதிகரிக்க தொடங்கும் வேளையில், அதற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘தென்மேற்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து