முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செம்மரக் கடத்தல்: நடிகை நீத்து அகர்வால் ஜாமீன் மனு தள்ளுபடி

ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2015      சினிமா
Image Unavailable

நகரி, ஆந்திராவில் செம்மரக் கடத்தல் சம்பவம் தொடர்பாக கைதான தொழிலாளர்களிடம் நடத்திய விசாரணை மூலம் செம்மரக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு உள்ள முக்கிய பிரமுகர்கள் பட்டியலை போலீசார் சேகரித்தனர். இதையடுத்து கர்னூல் மாவட்டத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகரும், படத் தயாரிப்பாளருமான மஸ்தான் வலி என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தனது படத்தில் கதாயநாயகியாக நடித்த நீத்து அகர்வால் மூலம் கடத்தல்காரர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தெரியவந்தது.

மஸ்தான்வலியுடன் மனைவி போல் குடித்தனம் நடத்தி வந்த நீத்து அகர்வாலை ஐதராபாத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் நந்தியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில் மஸ்தான் வலியுடன் உள்ள தொடர்பு கடத்தல்காரர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்த விவரம் போன்றவைகள் பற்றி விசாரித்தனர். போலீஸ் காவல் முடிந்ததையடுத்து நீத்து அகர்வால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி நீத்து அகர்வால் ஆலகட்டா ஜூடிசியல் முதல் வகுப்பு கோர்ட்டில் மனு செய்தார். நேற்று முன்தினம் இந்த மனு விசாரணைக்கு வந்தது. நீத்து அகர்வால் சார்பில் அவரது வக்கீல் சிவபிரசாத்ராவ் ஆஜராகி வாதாடினார். போலீஸ் விசாரணை முடிந்து விட்டதால் நீத்து அகர்வாலுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் கோரினார். ஆனால் இதற்கு அரசு தரப்பு வக்கீல் பாலுநாயக் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதிடும் போது நீத்து அகர்வாலிடம் விசாரணை இன்னும் முடியவில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை இன்னும் கைது செய்ய வேண்டியது உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணைக்கு பங்கம் ஏற்படும் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சோமசேகர் நடிகை நீத்து அகர்வால் ஜாமீன் மனு நிராகரித்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து