முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பிரதமர் மோடி மனைவி மீண்டும் மனு

ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2015      இந்தியா
Image Unavailable

ஆமதாபாத், பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பிரதமர் மோடி மனைவி மீண்டும் மனு செய்தார்.
 
பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஐசோதாபென். இருவரும் திருமணமான சில நாட்களிலேயே பிரிந்து விட்டனர். குஜராத் மாநிலத்தில் தனது சகோதரர் அசோக் மோடியுடன் ஐசோதாபென் வசித்து வருகிறார். மோடி பிரதமர் ஆனதை தொடர்ந்து ஐசோதாபென்னுக்கு பிரதமர் மனைவி என்ற முறையில் சிறப்பு பாதுகாப்பு அளிக்க குஜராத் மாநில அரசு உத்தரவிட்டது. இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸ்காரர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். தனக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு விவரங்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்து இருந்தார். இந்த மனுவை மேக்சனா போலீஸ் கமிஷனர் மூலம் அனுப்பி இருந்தார். இதற்கு தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர் பதில் அளித்திருந்தார். அவரது பதில் திருப்தி அளிக்காததால் யசோதாபென் நேற்று முன்தினம் தனது வக்கீல் சந்தீப்மோடியுடன் தலைநகர் காந்திநகர் வந்தார். அங்கு தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையர் அலுவலகம் சென்று ஆணையரிடம் நேரில் மனு கொடுத்தார். அதில் தனக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு விவரங்கள் குறித்தும், பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டது யார் என்ற விவரங்களை தெரிவிக்குமாறு கேட்டு இருந்தார். அவரது மனுவை பெற்று கொண்ட தகவல் அறியும் உரிமை சட்ட அலுவலக ஆணையர் இது பற்றி ஆலோசனை நடத்தி 3 மாதத்தில் பதில் அளிக்கிறேன் என்று ஐசோதாபென்னிடம் உறுதி அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து