முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனைய முகப்பு பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை நீக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 3 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தின் வருகை பகுதியில் உள்ள முகப்பு பகுதிக்கு வாகனங்கள் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களின் வருகை பகுதியின் முகப்பு பகுதிக்கு (போர்டிகோ) வாகனங்கள் வந்து பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம். ஆனால், பாதுகாப்பு நலன் கருதி கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் முகப்பு பகுதிக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

முக்கிய பிரமுகர்கள், வயதானவர்கள், நோயாளிகள், உடல் ஊனமுற்றவர்களின் வாகனங்கள் மட்டும் வருகை பகுதி முனையங்களில் சென்று பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் விமான நிலைய ஆணையக அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய போலீசார், மத்திய தொழிற்படை போலீசாரின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

இதில் உள்நாட்டு முனையத்தின் வருகை பகுதி முகப்பு பகுதிக்கு வாகனங்கள் வந்து பயணிகளை ஏற்றிச்செல்வதற்கான தடையை நீக்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே முகப்பு பகுதியில் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால் நெரிசல் ஏற்படும் என போலீசார் தெரிவித்தனர். ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுவது என்றும், அதன் பின்னர் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து