முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பைல்களை எனது ஒப்புதலுக்கு அனுப்புங்கள்! கெஜ்ரிவாலுக்கு கவர்னர் உத்தரவு

திங்கட்கிழமை, 4 மே 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, அனைத்து பைல்களையும் எனது ஒப்புதலுக்கு அனுப்புங்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. டெல்லிக்கு மாநில அந்தஸ்து கிடையாது என்பதால் துணை நிலை கவர்னர் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு எந்த ஒரு சிறிய திட்டத்தை கூட செயல்படுத்த முடியாது. தற்போது டெல்லி கவர்னராக நஜீப்ஜங் பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அனைத்து துறைகளுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில் துறை சம்பந்தப்பட்ட அனைத்து பைல்களையும் கவர்னருக்கு அனுப்ப தேவையில்லை என்று கூறியிருந்தார்.

இது பற்றி தெரியவந்ததும் கவர்னர் நஜீப்ஜங் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், அனைத்து மந்திரிகளுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதில் அரசியல் சட்டப்படி டெல்லி மாநில அரசும், கவர்னரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது. கவர்னர் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவையும் மேற்கொள்ள முடியாது. எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. கவர்னர் அனுமதி வேண்டும். தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. எனவே துறை சம்பந்தப்பட்ட அனைத்து பைல்களையும் தனக்கு அனுப்பி இறுதியாக அனுமதியை பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இதே போல அதிகாரிகளை மாற்றும் போதும் அரசியல் சட்டப்படி தனது அனுமதி பெற வேண்டும் என்றும் கவர்னர் குறிப்பிட்டுள்ளார். இதனால் முதல்வர் கெஜ்ரிவால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாத நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார். கெஜ்ரிவால் மந்திரிகளுக்கு ரகசியமாக பிறப்பித்த உத்தரவு பத்திரிகைகளில் வெளியானதை தொடர்ந்து கவர்னர் அவருக்கு நினைவூட்டும் வகையில் தனக்குள்ள அதிகாரங்கள் குறித்து உத்தரவு பிறப்பித்து இருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து