முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் தண்ணீர் வரத்தால் வீராணம் ஏரி நிரம்புகிறது

திங்கட்கிழமை, 4 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு வருவதால் வீராணம் ஏரி தண்ணீரை சென்னை குடிநீர் வாரியம் முழுமையாக பயன்படுத்தி வருகிறது. வீராணம் ஏரியில் தண்ணீர் குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. இது கடந்த 1–ந் தேதியில் இருந்து வீராணத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.

வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கன அடியாகும். தற்போது 1100 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரி வேகமாக நிரம்பி வருவதால் மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர் 3 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது பற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், மேட்டூரில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வருவதால் 7–ந் தேதி வீராணம் ஏரி முழுமையாக நிரம்பி விடும். இதை வைத்து சென்னைக்கு 2 மாதத்துக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து