முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்த இந்திய இன்ஜினியரிங் பட்டதாரி சிரியாவில் பலி

செவ்வாய்க்கிழமை, 5 மே 2015      உலகம்
Image Unavailable

ஐதராபாத் - ஐதராபாத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி ஒருவர் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து சண்டையில் பலியானதாக உளவுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.மும்பையில், உள்ள கல்யாண் பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் ஈராக்கில் உள்ள ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக வெளியான செய்திகளை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டது.

பின்னர் நடத்திய விசாரணையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முஸ்லிம் இளைஞர்கள் பலரை சமூக வலைத்தளங்கள், ரகசிய ஏஜன்டுகள் மூலமாக மூளைச் சலவை செய்து ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைப்பதாக தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரணையும், கண்காணிப்பும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஐதராபாத் அருகே உள்ள அடிலாபாத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி ஒருவர் ஐஎஸ் அமைப்பில் இணைந்து சிரியாவில் நடந்த சண்டையில் பலியானதாக உளவுத்துறையினர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

அடிலாபாத்தைச் சேர்ந்த 25 வயதான ஹனீப் வாசீம் என்ற வாலிபர் மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவரை சமூக வலைத்தளங்கள் மூலமாக மூளைச் சலவை செய்து ஐஎஸ் அமைப்பினர் அங்கிருந்து அவரை சிரியாவுக்கு கொண்டு சென்று சண்டையில் ஈடுபடுத்தினர்.இதில் கடந்த மார்ச் 15ம் தேதி அவர் பலியானார்.

அதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரியில் தனது சகோதரியின் திருமணத்திற்காக இந்தியா வந்த ஹனீப் அதற்கு பிறகு குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் தெரிகிறது. அவர் ஐஎஸ் அமைப்பில் இணைவதற்கு உதவி செய்த இந்தியாவைச் சேர்ந்த மற்றொருவரை உளவுத்துறையினர் தேடி வருகின்றனர். ஏற்கெனவே கடந்த ஆண்டு ஐதராபாத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்காக கத்தாரில் இருந்து துருக்கி சென்றார்.

பின்னர் மனம் மாறி நாடு திரும்பினார்.
அதே போல் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த ஜாவேத் என்ற 24 வயது வாலிபரை ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். தற்போது ஹனீப் வாசீன் ஐஎஸ்சில் இணைந்து போரிட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து