முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதியில் இந்தியரை கொன்ற 5 பேருக்கு மரண தண்டனை

செவ்வாய்க்கிழமை, 5 மே 2015      உலகம்
Image Unavailable

ஜெட்டா - சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவரை கொலை செய்த 5 பேரின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் மேற்கு கடற்கரை நகரமான ஜெட்டாவில் இந்தியர் ஒருவர் நடத்தி வந்த கடைக்குள் கடந்த ஆண்டு 5 பேர் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்தனர். பணத்தை கொள்ளை அடிக்கும் நோக்கத்துடன் நுழைந்த அவர்கள், தடுக்க முயன்ற இந்தியரை வெட்டி கொன்றனர்.

பின்னர் அங்கிருந்து தப்பினர். அங்கிருந்த வீடியோ காமிராவில் அவர்களின் உருவம் பதிவானது. இதை வைத்து கொள்ளையர்களை சவுதி போலீஸ் எளிதாக கைது செய்தது. இவர்களில் இண்டு பேர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்ற 3 பேரில் ஒருவர் சாட் நாட்டையும், ஒருவர் எரித்ரீ நாட்டையும், மற்றொருவர் சூடான் நாட்டையும் சேர்ந்தவர்.

இவர்கள் மீது ஜெட்டா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில் குற்றம் நிருபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களது அப்பீல் மேல்கோர்ட்டுகளில் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் இவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 5 பேரின் தலை துண்டிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் கொலை, போதை மருந்து கடத்தல், ஆயுதங்களை காட்டி கொள்ளை அடித்தல், இஸ்லாம் மதத்தை இழிவு படுத்துவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 87 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உலக அளவில் மரண தண்டனை அதிகம் விதிக்கப்படும் முதல் 5 நாடுகள் பட்டியலில் சவுதி அரேபியா இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து