Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு டோணி தலைமையே காரணம்:சுரேஸ் ரெய்னா பேட்டி

செவ்வாய்க்கிழமை, 5 மே 2015      விளையாட்டு
Image Unavailable

பெங்களூர் - பெங்களூர் அணியை 2-வது முறையாக வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.முதலில் விளையாடிய சென்னை அணி 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்தது. ரெய்னா 46 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 52 ரன்னும், கேப்டன் டோணி 18 பந்தில் 29 ரன்னும் எடுத்தனர். பெங்களூர் தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹர்சல் பட்டேல், டேவிட் வைஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் விளையாடிய ராயல் செல{ர்ஸ் பெங்களூர் ணி 19.4 ஓவரில் 124 ரன்னில் சுருண்டது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி அதிகபட்சமாக 48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 23 ரன்களும் எடுத்தனர். ஆசிஷ் நெஹ்ரா 3 விக்கெட்டும், பிராவோ, ஈஸ்வர் பாண்டே தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.ஆட்டநாயகன் விருது பெற்ற ரெய்னா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகளுக்கு கேப்டன் டோணியின் தலைமையே காரணம். கேப்டன் பதவியில் அவர் மிகவும் சிற்பபாக செயல்பட்டு அணியை வழி நடத்துகிறார். கடந்த 8 ஆண்டாக நான் சென்னை அணியில் விளையாடி வருகிறேன். ஒவ்வொரு தொடரிலும் டோணியின் கேப்டன் திறமை வெளிப்படுகிறது.

நாங்கள் 140 முதல் 150 ரன் இலக்கை நிர்ணயித்து பல போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறோம். வீரர்களின் கூட்டு முயற்சி முக்கிய பங்காக இருந்தது. வீராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது ரன் அவுட் முக்கியத்துவம் பெற்றது. எங்களது பீல்டிங் அபாரமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த தொடரில் விளையாடிய 9 ஆட்டங்களில் பெற்ற 7வது வெற்றி இதுவாகும். இதனால் 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்த சீசனில் சென்னை அணி தொடர்ச்சியாக பெற்ற 5-வது வெற்றியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous May 8, 10:41

    நல்லாவே ஜால்ரா போடுங்க. அப்பதான் இந்தியன் டீமில் இடத்தை தக்க வைத்துகொள்ள முடியும். இல்லாவிட்டால் யுவராஜ் கதிதான்.

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து