முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சின்னையா வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 5 மே 2015      தமிழகம்

சென்னை, ஜெயலலிதா நல்லாசியுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படுவதாக தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பேசினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தாம்பரம் வட்டாட்சி யர் அலுவலகத்தில், நடந்தது.

இதில் தமிழக கால்நடை பரா மரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகள் 5 நபர்களுக்கு தலா ரூ.55,790 வீதம் மொத்தம் ரூ.2,78,950 மதிப்பிலான மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம், 3 நபர்களுக்கு தலா ரூ.5100 வீதம் மொத்தம் ரூ.15,300 மதிப்பிலான செயற்கை அவயம், 6 நபர்களுக்கு தலா ரூ.4475 வீதம் மொத்தம் ரூ.26,850 மதிப்பிலான சக்கர நாற்காலி, 3 நபர்களுக்கு தலா ரூ.3300 வீதம் மொத்தம் ரூ.9900 மதிப்பிலான காலிபர் கருவி, 23 நபர்களுக்கு தலா ரூ.1038 வீதம் மொத்தம் ரூ.23,874 மதிப்பிலான காதொலி கருவி, சோலார் பேட்டரி, 1 நபருக்கு ரூ.550 மதிப்பிலான அக்குள் கட்டை மற்றும் 2 நபர்களுக்கு தலா ரூ.700 வீதம் மொத்தம் ரூ.1400 மதிப்பிலான மடக்கு குச்சி, கைகடிகாரம், என மொத்தம் 43 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.3.57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிறகு அவர் கூறியதாவது:

மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் இன்று தாம்பரம், பல்லவபுரம், ஆலந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 43 மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் மற்றும் பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் மட்டும்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.  தற்போது அது ஏப்ரல் 2015 முதல் ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள எந்த மாநில அரசும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை வழங்கவில்லை. மற்ற மாநிலங்களில் ரூ.200, ரூ.300 அதிகபட்சமாக ரூ.500 மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

தாம்பரம் நகராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களில் தற்போது 13,400 குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வந்துள்ளது. இன்று வழங்கப்படும் அட்டைகள் தவிர மற்றவர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மருத்துவ அட்டைகள் வழங்கப்படவுள்ளது. ஜெயலலிதா  ஆட்சியில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ள ரூ.4 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் டி.கே.எம். சின்னையா பேசினார்.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் ப.தன்சிங், வி.என்.பி.வெங்கட்ராமன், தாம்பரம் நகர்மன்றத் தலைவர் எம்.கரிகாலன், , மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப.முருகேசன், உதவி செய்தி அதிகாரி ப.முத்தமிழ்செல்வன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து