முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சல்மான்கானின் கார் மோதி ஒருவர் இறந்த வழக்கில் இன்று தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 5 மே 2015      சினிமா
Image Unavailable

மும்பை - கடந்த 13ஆண்டுகளுக்கு முன்னர்நடிகர் சல்மான்கான் காரை ஓட்டி ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.இந்த தீர்ப்பின் போது பாலிவுட் நடிகர் சல்மான்கான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 13ஆண்டுகளுக்கு முன்னர் மும்பை புறநகர் பகுதியான பந்த்ராவில் நடிகர் சல்மான் கான் வந்த கார் ஒரு பேக்கரி மீது மோதியது.இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.4பேர் காயம் அடைந்தார்கள்.

இந்த வழக்கில் சல்மான்கான் குற்றவாளியா அல்லது விடுவிக்கப்படுவாரா என்பது குறித்து மும்பை செசன்ஸ் நீதிமன்றமத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இதனையொட்டி நீதிமன்றத்தை சுற்றி போலீசார் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர். சல்மான்கானின் ரசிகர்கள் நீதிமன்றத்திற்குள் நுழையமுடியாத அளவிற்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீர்ப்பு அளிக்கும் போது நீதிமன்றத்திற்குள் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மற்றும் கோர்ட் ஊழியர்கள் மட்டும் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வழக்கு விசாரணையை நீதிபதி தேஷ்பாண்டே மேற்கொண்டுள்ளார். தீர்ப்பு இன்று(மே6)அளிக்கப்படும் என அவர் அறிவித்தார்.இந்த தீர்ப்பு அளிக்கப்படும் போது நடிகர் சல்மான்கான் காலை 11.15மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கின் வாதி பிரதிவாதி வாதங்கள் ஏப்ரல் 21ம் தேதியன்று முடிவடைந்தன. வழக்கு விசாரணையின்போது காரை தான் ஓட்டவில்லை என்று 49வயது நடிகர் சல்மான்கான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். காரை தனது டிரைவர் அசாக் சிங் ஓட்டினார் என்றும் அவர் கூறினார்.  சல்மான் கான் பகார்டி ரம்மை குடித்துவிட்டு காரை ஓட்டியுள்ளார்.அப்போதுதான் விபத்து நடந்துள்ளது என எதிர்தரப்பு வழக்கறிஞர் பிரதீப் காரட் நீதிமன்றத்தில் வாதாடினார்.இந்த குற்றச்சாட்டை சல்மான்கான் நீதிமன்றத்தில் மறுத்தார். தனது கையில் மதுபானம் இல்லை.தண்ணீர் டம்ளரை தான் வைத்திருந்தேன் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து