முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாரடைப்பு: டைரக்டர் மணிரத்னம் டெல்லி மருத்துவமனையில் அனுமதி

புதன்கிழமை, 6 மே 2015      சினிமா
Image Unavailable

சென்னை, இயக்குனர் மணிரத்தினத்துக்கு நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படத்தையடுத்து இந்தி படம் இயக்க திட்டமிட்டிருக்கிறார். இதற்கு லொகேஷன் பார்ப்பதற்காக காஷ்மீர், டெல்லி போன்ற இடங்களுக்கு சென்றார். நேற்று முன்தினம் டெல்லியில் தங்கியிருந்த அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சு வலிப்பதாக கூறிய அவரை உடனடியாக அங்கிருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இது பற்றி மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், மணிரத்னத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்து வருகிறார் என்றனர். இது பற்றி ஒரு தரப்பினர் கூறும் போது, மணிரத்னத்திற்கு சளி அதிகம் இருந்தது. அதற்காகவும் முழு உடல் பரிசோதனைக்காகவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு மாரடைப்பு ஏதும் இல்லை என்றனர். இதற்கிடையில் மணிரத்னத்தின் மனைவி சுகாசினி மற்றும் குடும்பத்தார் டெல்லி புறப்பட்டு சென்றனர். அவர்கள் மருத்துவமனையிலேயே தங்கி இருந்து மணிரத்னத்தை கவனித்து வருகின்றனர். ஏற்கனவே ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டு மணிரத்னம் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து