முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி ஊழல் வழக்கில் 14 பேர் 22ம் தேதி ஆஜராக நீதிமன்றம் சம்மன்

புதன்கிழமை, 6 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜார்க்கண்ட் நிலக்கரி படுகை ஒதுக்கீடு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மற்றும் தொழிலதிபரரான நவீன் ஜின்டால் மற்றும் 14பேர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு சிபிஐ நீதிபதி பரத் பராஷர் நேற்று உத்தரவிட்டார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியின் போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அமர் கொண்டா முர்கடன்கல்நிலக்கரி படுகை யை ஒதுக்கீடு செய்தது.இந்த ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.

இந்த வழக்கினை சிறப்பு சிபிஐ நீதிபதி பரத் பராஷர் விசாரணை செய்கிறார்.

ஜார்க்கண்ட் நிலக்கரி படுகை ஒதுக்கீடு வழக்கில் தொழிலதிபர் நவீன் ஜின்டால் மற்றும் 14பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. முன்னாள் நிலக்கரித்துறை இணை அமைச்சர் தாசரி நாராயண ராவ் ,ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மதுகோடா ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் இந்த  மே மாதம் 22ம்தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி பரத் பராஷர்  உத்தரவிட்டுள்ளார், நிலக்கரி படுகை ஒதுக்கீடு முறைகேட்டில் 5நிறுவனங்களுக்கும் தொடர்பு உள்ளது என  சிபிஐ  குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இதனை தொடர்ந்து அந்த நிறுவனங்களின் அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் கூறப்பட்டுள்ளது.

ஜே.எஸ்.பி.எல்,ஜின்டால் ரியாலிட்டி பிரைவேட் லிமிடெட் ,ககன் இன்ப்ரா எனர்ஜிலிமிடெட் நியூடெல்லி எக்சிம் பிரைவேட் லிமிடெட் மற்றும் சௌபாக்யா மீடியா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் கோர்ட் சம்மன் அனுப்பியது.
கடந்த 2008ம்ஆண்டு ஜார்க்கண்ட் நிலக்கரி படுகை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு உள்ளளது என சிபிஐ ஏப்ரல் 29ம் தேதியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த குற்றப்பத்திரிகை தொடர்பாக மே5ம்தேதியன்று பரிசீலனை செய்யப்படும் என ஏப்ரல் 30ம் தேதியன்று  நீதிமன்றம் அறிவித்தது.
2008ம் ஆண்டு நிலக்கரி படுகை ஒதுக்கீட்டை பெறுவதற்காக ஜின்டால் நிறுவனம் தவறான தகவலை அளித்தது என சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து