முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேவை மற்றும் சரக்கு வரிகள் மசோதா மக்களவையில் நிறைவேறியது

புதன்கிழமை, 6 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஒருமித்த வரி அமைப்பை ஏற்படுத்துவதற்காக சரக்குமற்றும் சேவைகள் வரி மசோதா நேற்று மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா  வாகெடுப்புக்கு வந்த போது பிரதமர் நரேந்திர மோடி அவையில் இல்லை.

சரக்கு மற்றும் சேவைகள் வரி மசோதா நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் இருந்தது. அந்த மசோதாவிற்கு மக்களவையில் நேற்று ஒப்புதல் தரப்பட்டது.

இந்த மசோதாவிற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற போது காங்கிரஸ் வெளி நடப்பு செய்தது.இந்த புதிய வரி திட்டத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு அளிக்கும் என அரசு கூறியபோதும் எதிர்கட்சியினர் அதனை ஏற்கவில்லை. புதிய சீரான மறைமுக வரி நிபுணர் குழு பரிந்துரைப்படி 27சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என  மத்திய அரசு தெரிவித்தது.

சரக்கு மற்றும் சேவைகள் வரி மசோகாவிற்கு ஆதரவாக மக்களவையில் 352வாக்குகள் பதிவானது. 37உறுப்பினர்கள் மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர். இந்த வரி மசோதவை நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என எதிர்கட்சியினர் வலியுறுத்தினர்.இதனை மத்திய அரசு ஏற்கவில்லை.

வரி மசோதாவில் பல திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்கட்சிகள் கோரியபோதும் அவை ஏற்கப்படவில்லை.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அளித்த வாக்குறுதியைத்தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சௌகதா ராய் சில திருத்தங்களை கொண்டு வர வலியுறுத்த வில்லை.

சரக்கு மற்றும் சேவைகள் வரி திட்டத்தை  2016ம்ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிமுதல் அமல் படுத்த வேண்டும்  எனதிட்டமிடப்பட்டிருந்தது. இந்த வரி திட்டத்தில் கலால்,சேவை வரி, மாநில வாட் வரி, நுழைவு வரி, ஆக்ட்ராய் ஆகியவை உள்ளடக்கியவையாக இருந்தன.

இந்த மசோதா மீதான விவாதத்தின் போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில் மறைமுக வரி சீரமைப்பு கருத்துரு கடந்த 12ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. முந்தய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது இந்த மசோதாவை கொண்டு தீவிரம் காட்டினார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து